Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிளாட்பார்ம் தண்டவாளத்தை கடந்தவர் ரயிலில் சிக்கி பலி

சேலம், செப். 7: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் 5வது பிளாட்பார்ம் தண்டவாளத்தை கடந்தவர், பாட்னா ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 7.45 மணியளவில் எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் வந்தது. 5வது பிளாட்பார்ம்மில் அந்த ரயில் வந்தபோது, திடீரென ஒருவர் தண்டவாளத்தை கடந்து 4வது பிளாட்பார்ம்மிற்கு செல்ல முற்பட்டார். அவர், பிளாட்பார்மிற்கும், தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கினார். ரயில் அவரை கடந்தபோது, இன்ஜினில் மாட்டிக்கொண்டு, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். அதில், உடல் நசுங்கியும், 2 துண்டாகியும் அவர் பலியானார்.

ரயிலை லோகோ பைலட் நிறுத்திய நிலையில், அப்பகுதியில் பயணிகள் குவிந்தனர். தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி, சிறப்பு எஸ்ஐ தங்கராசு தலைமையிலான போலீசார், சம்பவ இடம் வந்து ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலியான நபரின் உடலை மீட்டனர். சுமார் 50 வயதுள்ள அவர், சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தார். 5வது பிளாட்பார்மில் நின்றிருந்த அவர், தண்டவாளத்தை கடந்து 4வது பிளாட்பார்மிற்கு சென்று விடலாம் என கீழே இறங்கிச் சென்றுள்ளார். அப்போது அவர், ரயில் வருவதை கவனிக்காததால், அதனுள் சிக்கி உயிரிழந்துள்ளார், எனத்தெரிந்துள்ளது.

இதையடுத்து இறந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.