சேலம், செப். 7: சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த யுபிஎஸ்சி பயிற்சிக்கான மதிப்பீட்டு தேர்வில், 661 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழக இளைஞர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் யுபிஎஸ்சி முதல்நிலை ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான மதிப்பீட்டு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதன்மூலம் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு யுபிஎஸ்சி குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வு பயிற்சிக்கு ஊக்குவிக்கும் வகையில், 10 மாதங்களுக்கு தலா ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இத்தேர்விற்கு 877 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி, குகை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளி மற்றும் அம்மாப்பேட்டை ஆண்கள் பள்ளியில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 661 தேர்வுகள் கலந்து கொண்டு எழுதினர். அதே சமயம் விண்ணப்பித்திருந்த 216 பேர் தேர்வெழுத வரவில்லை. ேதர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
ஈடுபட்டனர்.


