Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பள்ளிகளில் ஆய்வு ரீல்ஸ் போட்டு சர்ச்சையை கிளப்பிய தவெக நிர்வாகிகள்

ஓமலூர், ஜூலை 6: ஓமலூரில் உள்ள பள்ளிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அதிரடி ஆய்வு நடத்தியது, தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் நகர தவெக செயலாளர் மணி தலைமையில், அரசு உதவிபெறும் பள்ளிக்கு சென்ற கட்சி நிர்வாகிகள், மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறியதோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளனர். இதேபோல் அங்கன்வாடி மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிலும் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் கலந்து கொண்டு, அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினரின் இந்த அதிரடி ஆய்வு, அரசியல் மற்றும் சமூக வலைத்தள பதிவுகள், ஓமலூர் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.