Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சர்வதேச கதிரியக்கவியல் தினம் கொண்டாட்டம்

சேலம், நவ.5: விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் மருத்துவ கதிரியக்கவியல் பிரிவின் சார்பில், சர்வதேச கதிரியக்கவியல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து, செயற்கை நுண்ணறிவு திறனை வளர்த்துக் கொள்வதன் அவசியம் மற்றும் அவற்றை தங்களின் துறை ரீதியான மேம்பாட்டில் எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக் கொள்வது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விம்ஸ் மருத்துவமனையின் கதிரியக்கவியல் பிரிவின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராமமூர்த்தி, மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஷ்ணுகார்த்திக் ராஜ் மற்றும் மூத்த கதிரியக்கவியல் தொழில்நுட்பவியலாளர் ஜெயவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை சீமென்ஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் சுவாமிநாதன், சென்னை சவிதா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் விரிவுரையாளர் அல்போன்ஸ், திருச்சி எஸ்ஆர்எம் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கதிரியக்கவியல் பிரிவு உதவி பேராசிரியர் யோகி கண்ணன் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு கதிரியக்கவியல் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் PACS மென்பொருளை மாணவர்கள் துறை ரீதியான வளர்ச்சிக்கு வழங்கினர். இதனை கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியை கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், ஆண்டனி காட்ஸன், கிருத்திகா மற்றும் திவ்யா செய்திருந்தனர்.