சேலம், ஆக.5: கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி வரும் 7ம் தேதி சேலம் டவுன், கடைவீதி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் ஆடிப்பண்டிகையையொட்டி தேரோட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதனால், தேர் செல்லும் வீதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. கோட்டை மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் பகுதியில் துவங்கி, முதல் அக்ரஹாரம், தேர்வீதி, ஆனந்தா இறக்கம், லட்சுமி நரசிம்மர் கோயில், 2வது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் இறக்கம், நகைக்கடை வீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை சேலம் நகர கோட்ட செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
+


