சேலம், ஆக.5: விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் தீபிகா வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று தலைமையுரையாற்றி தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் முன்னாள் மாணவர் வலையமைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது வெற்றிப் பயணங்களையும், கல்லூரி கால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் சங்கத்தின் மூலம் தற்போது கல்லூரியில் பயிலும், கல்வியில் சிறந்து விளங்கும் தகுதியுள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், கல்லூரியின் நூலகத்திற்கு நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மேலும் கல்வியாளர், ஆராய்ச்சியாளர், தொழில் முனைவோர், சுகாதார சேவை வழங்குபவர், தொலைநோக்குப் பார்வை சார்ந்த பிரிவுகளின் கீழ் விருதுகளானது சிறந்த பங்களிப்பாற்றி வரும் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரியின் முன்னாள் மாணவ சங்க உறுப்பினர்கள்
செய்திருந்தனர். ...


