ஆத்தூர், நவ.4: தலைவாசல் சுற்று வட்டார பகுதியில் மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தலைவாசல் போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் எஸ்ஐ சிவசக்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தியதில், தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் வசிக்கும் சக்திவேல் மனைவி நாகம்மாள்(52) மற்றும் ஆறகளூர் அம்பாயிரம் மகன் வெங்கடேசன்(32), ஆகிய இருவரும் வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


