Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது

சேலம், நவ.3: சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரில் உள்ள டீ கடை அருகே தொழிலாளியான காந்தி மகான் தெருவை சேர்ந்த சூர்யா (38) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடிகள் 2 பேர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் தேடப்பட்டு வந்த ரவுடிகளான பட்டைக் கோயில் அசோக்(எ)பச்சைக்கிளி(22), குறிஞ்சி நகர் பிரேம்குமார்(26) ஆகியோரை கைது செய்தனர்.