Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சேலத்தில் அதிகாரிகள் சோதனை; கெட்டுப்போன மீன் விற்ற 2 கடைகளுக்கு நோட்டீஸ்; 16 கிலோ மீன், 2 கிலோ நண்டு பறிமுதல்

சேலம், நவ.3: சேலத்தில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இந்த கடைகளில் இருந்து 16 கிலோ மீன்கள், 2 கிலோ நண்டு பறிமுதல் செய்யப்பட்டது.  சேலம் சூரமங்கலம் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதிசோழன், சூரமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு பணியாளர்கள் நேற்று முன்தினம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள 16 கடைகளில் சோதனை செய்ததில் 2 கடைகளில் கெட்டுப்போன மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 2 கடைகளில் இருந்து 16 கிலோ கெட்டு போன மீன்கள், 2 கிலோ நண்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை விற்பனை செய்த 2கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மீன் மார்க்கெட்ைட சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கெட்டுப்போன மீனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.