Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தி காவிரி மருந்தியல் கல்லூரி வளாகத்தில்; பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் திருவிழா

சேலம், நவ. 2: தி காவிரி கல்வி நிறுவனத்தின், தி காவிரி மருந்தியல் கல்லூரி வாளகத்தில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்தனர். முன்னதாக தி காவிரி இன்ஜினியரிங் கல்லூரியின் சேர்க்கை பிரிவு புல முதன்மையர் நந்தகுமார், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார்.

பேராசிரியர் இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இன்றைய கண்டுபிடிப்புகள், நாளைய உலகின் அடித்தளம் என்று ஊக்கமளித்தார்.சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி செய்திப்பிரிவு முதன்மை அதிகாரி அருண்குமார் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினார். மேலும், தி காவிரி இன்ஜினியரிங் கல்லூரி கல்வி நிறுவனத்திற்கு நினைவு பரிசை, பேராசிரியர் இளங்கோவனிடம் வழங்கினார். துளிரும் விஞ்ஞானி என்ற முறையில், ஜூனியர் மற்றும் சீனியர் நிலையில் பரிசு மற்றும் ஊக்கத்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட நடுவர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தி காவிரி மருந்தியல் கல்லூரி முதல்வர் நன்றி

கூறினார்.