Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் 8 இடங்களில் சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை; அமைச்சர் தொடங்கி வைத்தார்

இளம்பிள்ளை, நவ.2: சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் நடக்கும் சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை, இளம்பிள்ளையில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு விற்பனையை ெதாடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் சங்ககிரி எஸ்.715 சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ஆத்தூர் எஸ்.715 சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மேட்டூர் எஸ்.715 சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, எஸ்.எஸ்.74 சேலம் உருக்காலைப் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, எஸ்.எல்.(சிறப்பு).9 காடையாம்பட்டி கூட்டுறவுப் பண்டகசாலை, எஸ்.1486 இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, எஸ்.எம்.85 சேலம் பெரியார் பல்கலைகழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவுப் பண்டகசாலை மற்றும் கே.கே.318 டால்மியா மாக்னசைட் பணியாளர்கள் கூட்டுறவுப் பண்டகசாலை ஆகிய 8 இடங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நிகழ்ச்சியில், கலெக்டர் இளம்பகவத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர்கள் பாலாஜி (பொது விநியோகத் திட்டம்), சரவணன் (சேலம் சரகம்), வீரபாண்டி கூட்டுறவு சார் பதிவாளர் இந்திரா பிரியதர்ஷினி, கள அலுவலர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.