Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ப்பு

சேலம், ஆக.1: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 20,004 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 8ம் ேததி வெளியானது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 36,572 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், மாணவர்கள் 16,443 பேரும், மாணவிகள் 18,891 பேரும் என மொத்தம் 35,334 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு, உயர்கல்வியில் சேர்வதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

நடப்பாண்டு இதுவரை கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. இன்ஜினியரிங், வேளாண் படிப்புகளுக்காக கலந்தாய்வு நடந்து வருகிறது. எம்பிபிஎஸ் மற்றும் நர்சிங் கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை. சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 20,004 மாணவர்கள் (59%) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள அனைவரையும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.