Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேர்ச்சாயி‌ அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

இளம்பிள்ளை, ஜூன் 30: இடங்கணசாலை நகராட்சி, கொசவப்பட்டியில் சேர்ச்சாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த 7ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு கங்கணம் கட்டுதலுடன் விழா தொடங்கியது. 26ம் தேதி கிராம சாந்தி பூஜையும், 27ம் தேதி காலை கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கஞ்சமலை சித்தர் கோயிலில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் பசு, காளைகள், குதிரை தாரை தப்பட்டை முழங்க கோயிலை சென்றடைந்தன.

28ம் தேதி பஞ்ச காவியம், இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமம், தானியம் நிரப்புதல், கோபுர கலசம் வைத்தல், சேர்ச்சாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றன. நேற்று காலை சேர்ச்சாயி அம்மன் உற்சவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றினர். அதன் பின் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பூசாரிகள், அசூர் காணிகுல அனைத்து ஊர் பங்காளிகள் செய்திருந்தனர். ...