வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை, மே 10: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு 2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின்போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான பயிற்சியும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பயிற்சிகள் கண்காணிப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மற்றும் மருத்துவ குழுக்கள் இந்த மாதிரி பயிற்சியில் பங்கேற்றனர்.