எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
Advertisement
இதில் சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி விகல் சுக்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அவர் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும், போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆபத்தான புள்ளிவிவரங்களையும் எடுத்துரைத்து, போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் பட்டியலிட்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும், சென்னை சமூகப் பணிப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Advertisement