விதிமுறைகளை மீறி செயல்பட்ட கார் சர்வீஸ் சென்டருக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை
Advertisement
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பெனிக்கு முறையாக நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் அந்த கம்பெனி நிர்வாகம் அதனை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேரடியாக சென்று அங்கிருந்த கார் சர்வீஸ் சென்டருக்கு சீல் வைத்தனர். மேலும் உரிய அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கார் சர்வீஸ் சென்டரை இயக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement