தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூன்றரை ஆண்டுகளில் ரூ700 கோடி திட்ட பணி

கெங்கவல்லி, நவ.6: கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ700 கோடி மதிப்பில் பல்வேறு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுவதாக மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம், கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன், துணை மாவட்ட செயலாளர் சின்னதுரை, சுரேஷ், கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த சிறப்பு முகாமில் 20 துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

மக்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட துறையிடம் மனுக்களாக வழங்கிட வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ700 கோடி மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில பணிகள் முடிவடைந்து. சில பணிகள் நடைபெற்று வருகின்றன. 15வது நிதி குழு மானியத்தில் ரூ42கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் அமைந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் 84ஆயிரத்து 151 மாணவர்கள் பயனடைகின்றனர். புதுமை திட்டத்தில் 24ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். கெங்கவல்லி ஒன்றியத்தில் கலைஞர் கனவு திட்டத்தில் இதுவரை ரூ11கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிவடைந்து பயன் பெற்று வருகிறார்கள். மாதந்தோறும் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் 21,000 மகளிர்கள், முதியோர் உதவித்தொகை 1508பேர் பயனடைந்து வருகின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில், தமிழகத்தில் திட்டப்பணிகள் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வளர்ந்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.

இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, சொட்டுநீர் பாசன அமைத்தல், மண்புழு உரம் படுக்கை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ13.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 510 மனு, ஊரக வளர்ச்சி துறை 83மனு, பேரூராட்சி நிர்வாகம் 42 மனு உள்ளிட்ட 20 துறை சார்ந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பொதுமக்கள் 655 மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சப் கலெக்டர் மயில், கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் கோமதி ராமச்சந்திரன், கெங்கவல்லி ஒன்றிய ஆணையாளர் தாமரைச்செல்வி, சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கெங்கவல்லி ஜனார்த்தனன், தெடாவூர் யவனராணி, நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மூக்கன், துணை தலைவர் செந்தில்குமார், ஒதியத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணை தலைவர் துரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சமலை சின்னமணி பிரேம்குமார், கூடமலை யசோதா துரைசாமி, 74 கிருஷ்ணாபுரம் பெருமாள், கடம்பூர் உமா சுப்புரமணி மற்றும் 20க்கும் மேற்பட்ட துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News