கமுதி, அக்.30: கமுதி அருகே அ.தரைக்குடியில் நேற்று தேவர் குருபூஜையை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று அ.தரைக்குடி கிராமத்தில் ஏராளமானோர் காப்பு கட்டி விரதமிருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மேள தாளம்,வானவேடிக்கையுடன் அபிராமம் வரை வந்து தேவர் சிலையை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பக்தர் ஒருவர் பெரிய வேல் ஒன்று குத்தி நேர்த்திகடன் செலுத்தினார். பால்குட ஊர்வலம் பசும்பொன் வரை சென்று பாலாபிஷேகம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


