Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேரூராட்சி கூட்டத்தில் அரசு பொறியாளரை கண்டித்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

மண்டபம், அக்.30: மண்டபம் முதல் நிலை பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற மாதாந்திர மன்ற கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து விபரம் அறிய பேரூராட்சி பொறியாளர் வராததை கண்டித்து திமுக வார்டு கவுன்சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது. மண்டபம் முதல் நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து விவாதம் நடைபெற்று அதிகாரிகள் செயல்படுத்துவதற்கு கவுன்சிலர்கள் கோரிக்கை வைப்பார்கள். இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கம் கேட்பதற்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரிக்கை வைப்பதற்கும் பேரூராட்சி கூட்டத்திற்கு பொறியாளர் வருவதில்லை என குற்றம்சாட்டினர்.

இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை என குற்றம்சாட்டி மண்டபம் பேரூராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் வாசிம் அக்ரம் மன்ற கூட்டம் நடைபெற்ற அலுவலகத்தில் உட்கார்ந்து கோரிக்கை பதாகையுடன் தர்ணா போராட்டம் நடத்தி வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும் கூட்டத்தை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மண்டபம் பேரூராட்சியில் பரபரப்பு காணப்பட்டது.