தொண்டி, அக்.30: தொண்டி அருகே காரங்காடு மீனவ கிராமத்தில் ஏடிஎம் சேவை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள காரங்காடு, முள்ளிமுனை, மணக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தொண்டி மற்றும் நம்புதாளையில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். இப்பகுதி மக்கள் தங்கள் அவசரத் தேவைக்கு பணம் எடுக்க சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள நம்புதாளை தொண்டிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் காரங்காடு பகுதியில் அரசு வங்கி சார்பில் ஏடிஎம் சேவை துவங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்கள் கூறியது, காரங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உண்டு. அன்றாட தேவைக்கு பணம் எடுக்க தொண்டிக்கு செல்கின்றனர். அதனால் இப்பகுதியில் அரசு வங்கி ஏடிஎம் துவங்க வேண்டும் என்றார்.


