Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன.30: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்ய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும், மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், காரைக்குடி என்ற முகவரியிலோ அல்லது touristofficekaraikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04565 232348 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.