காரைக்குடி, அக்.29: காரைக்குடி அரசு சட்டக்கல்லூரியில் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மேலாளர் பார்த்தசாரதி சிறப்புரையாற்றினார். மாணவர்களிடையே, நேர்மையின் முக்கியத்துவம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


