Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

படகில் மீனவர் சாவு

தொண்டி, அக்.29: தொண்டி அருகே கடலில் மீனவர் மீன் பிடித்த போது படகில் இறந்தது பற்றி மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த குமரேசன் படகில் நேற்று வீமன் (57), ராமு, முத்துக்குமார், கனி உள்ளிட்டோர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது சாப்பிட்டு விட்டு படகில் படுத்த வீமன் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை. உடனடியாக சக மீனவர்கள் அவரை எழுப்ப பார்த்த முடியாததால் அவரை கரைக்கு கொண்டு வந்தனர். அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.