தேவகோட்டை, அக்.29: தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், சார் ஆட்சியர் ராகுல் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை தேவைகளையும் எடுத்துக் கூறி 62 நபர்கள் மனு அளித்தனர். சார் ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இந்த கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


