Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட அளவிலான கபடி போட்டி

சாயல்குடி, ஜன. 28: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அ.இ.பா.பிளாக் கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சப்பாணிமுருகன் தலைமை வகித்தார். அதிமுக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகபாண்டியன் முன்னிலை வகித்தார். அ.இ.பா.பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார். இந்த கபடி போட்டியில் 25 அணிகள் கலந்து கொண்டது. இறுதிபோட்டியில் சாத்தங்குடி அணியினர் முதல் இடத்தையும், சப்பாணிமுருகன் அணியினர் இரண்டாம் இடத்தையும், ஏ.புனவாசல் அணியினர் மூன்றாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பணமும், கோப்பைகள், கேடயங்களும் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியில் மதுரை,நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த அணிகள் கலந்து கொண்டது. இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.