சிவகங்கை, டிச. 27: வாழைப்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: வாழைப்பயிரில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிரை வேர்ப்பகுதி தவிர அனைத்தையும் அழித்துவிட வேண்டும். அவ்விடத்தில் 2கி.கி சுண்ணாம்புத்தூள் போட வேண்டும். வேர்ப்பகுதியில் துளையிட்டு 60மி.கி கார்பன்டசிம் மருந்து நிரப்பப்பட்ட காப்சூல் குப்பியை உள்ளே செலுத்த வேண்டும். வாழை இலைகளை தின்னக்கூடிய புழுக்களுக்கு 10லி நீருக்கு 6.5மி.லி டைக்ளோவாஸ் அல்லது கார்பரைல் 1லிட்டருக்கு 2கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.
+
Advertisement


