பரமக்குடி, ஜன.24: முதுகுளத்தூர் தாலுகா கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(85). இவருக்கும் இவரது தம்பி மகன் முருகவேல்(39)க்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 11.11.2021 அன்று தகராறு ஏற்பட்டு, முருகவேல் ஆத்திரம் அடைந்து பெரியப்பா முனியசாமியை வெட்டி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு பரமக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம்சாட்டப்பட்ட முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார்.
+


