Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளி வாகனம் கவிழ்ந்து 15 மாணவிகள் காயம்

பரமக்குடி, அக்.23: பரமக்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 15 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று செய்யாலூர் வயல்வெளி பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்திடீரென பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் பள்ளி வாகனத்துக்குள் இருந்த 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.