தொண்டி, அக்.23: தொண்டி கடல் பகுதியில் வலையில் சிக்கிய கடல் ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர்கள் மணிராஜ் மற்றும் தர்மராஜ். இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலில் வலையை விரித்த போது, அதில் அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து பத்திரமாக ஆமையை மீட்டு உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். இச்செயலை மரைன் போலீசார் மற்றும் சக மீனவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
+
Advertisement


