மானாமதுரை, ஜன.6: மதுரை கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக ேகாயம்புத்தூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இம்மாதம் ஐந்து நாட்கள் காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16322) தினமும் காலை 8 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் ஈரோடு, கரூர் திண்டுக்கல் மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு இரவு 7.40 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் மதுரை- திண்டுக்கல் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக இன்று (ஜன.6 ம் தேதி), நாளை ஜன.7, இம்மாதம் 20, 22, 29 ஆகிய தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக நாகர்கோவில் நோக்கி செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
+
Advertisement

