Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் ரயிலில் கடத்திய குட்கா பறிமுதல்

ராமேஸ்வரம், நவ.5: வாரணாசி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில ரயில்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கொண்டு வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் வாரணாசி ரயில் நேற்று மதியம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ரயில் பெட்டிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் கிடந்த நீல நிற மூட்டை ஒன்றை பிரித்துப் பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 14 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் விலை மதிப்பு 11 ஆயிரமாகும்.