Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிங்கம்புணரியில் மாடு திருடிய மூன்று பேர் கைது

சிங்கம்புணரி, நவ.5: சிங்கம்புணரி சேவகபெருமாள் கோயிலுக்கு நூறு ஆண்டுகளாக பக்தர்கள் நேர்த்திக் கடனாக மாடுகளை வழங்கி வருகின்றனர். இம்மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றித் திரிகிறது. கோவில் மாடுகளை சில சமூக விரோதிகள் திருடிச் சென்று சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலர் கோயில் மாடுகளை பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

அவர்களை பொதுமக்கள் பிடித்து சிங்கம்புணரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிங்கம்புணரி தேத்தாங்காடு பகுதியை சேர்ந்த சித்திக், புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் கதிரவன், கரூர் மாவட்டம் தகரம்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது விசாரணை செய்தனர்.