ராமேஸ்வரம், நவ.5: பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் ‘‘தேர்வை கொண்டாடுவோம்” எனும் தலைப்பில் தேர்வு விழிப்புணர்வு குறித்த தன்னம்பிக்கை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரிகளின் சபை துனை தலைவி அகஸ்டின் தலைமையேற்க முதல்வர் ஆனிபெர்பட் சோபி முன்னிலையில் நடந்தது.
இதில் தீவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் இளைய தலைமுறையினரிடையே ஒழுக்கம், நல்லறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து சமூகத்திற்கு சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசியர்களின் அர்பணிப்பு பணி குறித்து சிறப்புரை ஆற்றினார். சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவது குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் கராத்தே பழனிச்சாமி, மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா, நுகர்வோர் மைய தலைவர் பாண்டி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


