Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒரே நாளில் 6 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை, பிப்.5: சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. காரைக்குடி வடக்கு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்த குணா(25), சின்னையா (19), திருப்பத்தூரை அருகே இளையாத்தங்குடியைச் சேர்ந்த வெற்றிவேல்(24), சுள்ளாம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (38), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அருகே புன்னவாசலைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசலைச் சேர்ந்த ஹரிஹரன்(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிவபிரசாத் கலெக்டர் பொற்கொடிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 6 பேரையும் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.