கீழக்கரை, ஜன.5: கீழக்கரை வனச்சரக அலுவலர் கவுசிகா தலைமையில் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அப்பாத்தீவுக்கு 600 மீட்டருக்கு முன்பாக நான்கு பேர் படகில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில் அவர்கள், பச்சை நிற கடல் ஆமைகளை பிடித்து அவற்றை அறுத்த நிலையில் வைத்திருந்தனர். இதையடுத்து கீழக்கரையைச் சேர்ந்த பன்னாட்டார் தெருவில் வசிக்கும் சில்வஸ்டர்(30), பெத்திரி தெரு சத்யராஜ்(35), முனியசிவா(36), மீனவர் காலனி பாலமுருகன்(25) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.


