Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாடானை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருவாடானை, ஜன.5: திருவாடானை மற்றும் நகரிக்காத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிக்காத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர், பதனக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.