மானாமதுரை. நவ.4: காளையார்கோவிலைச் சேர்ந்தவர் சங்கர் (59). மில் தொழிலாளியான இவர், ஓய்வு பெற்று மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். நேற்று 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் சீண்டல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்பெண்ணின் தாய் வந்து பார்த்து சங்கரை சத்தம் போட்டுள்ளார். உடனே சங்கர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் சங்கரை கைது செய்தனர்.


