ராமநாதபுரம், நவ.4: ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, இந்த மாதத்திற்கு இன்று (4ம் தேதி) மற்றும் நாளை (5ம் தேதி)வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பயனாளர்கள் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்களை அவர்களின் வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.


