காரைக்குடி, நவ.4: காரைக்குடியில் உள்ள பர்மா காலனியில் பிரபல அழகு நிலையம் உள்ளது. இங்கு, நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்த நிலையில் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


