Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் ஓட்டம்

தொண்டி, ஜூன் 4: ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி வழியாக சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து நேற்று பகல் சென்றுள்ளது. காட்டுமன்னார்குடியை சேர்ந்த மனோ(35) பேருந்தை ஓட்டியுள்ளார். தொண்டியில் இருந்து பேருந்தை எடுத்த டிரைவர் பேருந்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இது குறித்து தொண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்று பஸ்ஸை கொடி பங்கு அருகே போலீசார் மறித்துள்ளனர். போலீசாரை பார்த்த டிரைவர் பஸ்ஸை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வேறு பேருந்தில் ஏற்றி விட்டனர். அரசு பஸ் டிரைவர் தாறுமாறாக பஸ்சை ஓட்டியது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக போலீசார் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.