Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

திருப்புத்தூர், செப். 30: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளி செயலர் அலகு மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதில் என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சக்திவேல் முருகன் கலந்து கொண்டு, காச நோய் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபத்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு மூர்த்தி, அழகு மீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.