தேவகோட்டை, டிச. 7: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தேவகோட்டை கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. தேவகோட்டையில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். கவிஞர் முத்துராக்கு, கவிஞர் காசி முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். புதிய பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் முருகன் அறிமுகம் செய்து வைத்தார். புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி வழிகாட்டுக் குழு புதிய உறுப்பினர் காமராஜர், முன்னாள் தலைவர் செல்வராஜ், முன்னாள் கிளை செயலர் சந்திரன், முன்னாள் கிளை பொருளாளர் செல்லையா பேசினர். இதில் தலைவராக டாக்டர் கணியன் பூங்குன்றன், செயலராக வெண்ணிலா, பொருளாளராக தர்மராஜா, துணைத் தலைவர்களாக செல்லையா, சந்திரன், துணைச் செயலாளராக ரத்தினம், மாவட்ட குழு உறுப்பினர்களாக முருகன், மேகலா, செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
+
Advertisement


