சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம்
மண்டபம், டிச. 7: மண்டபம் அருகே சாத்தக்கோன் வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் சித் சிங் காலோன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கூட்டங்களை நடத்துவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சுந்தரமுடையான் பகுதியிலுள்ள
சாத்தகோன்வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற செயலர் விசுவநாதன் தலைமை வகித்தார். சுந்தரமுடையான் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் கீதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.