Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குண்டும் குழியுமாக மாறிய நாகனேந்தல் சாலை; சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து பிரிந்து நாகனேந்தல், காவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதால், சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் நாகனேந்தல், காவனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களிலிருந்து அத்தானூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்தச் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் சைக்கிள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.