Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்புவனம் பகுதியில் ஆன்லைன் பதிவில் குளறுபடி பத்திரப்பதிவு கடும் பாதிப்பு

திருப்புவனம், ஆக.1: திருப்புவனம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.சர்வே எண் உள்ள நிலங்களை இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்டும் ஆன்லைன் குளறுபடியால் பத்திரப்பதிபு செய்ய முடியவில்லை. திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவாளர் அலுவலகங்களில் ஜி.ஆர் சர்வே எண் உள்ள இடங்களை பதிய முடிய வில்லை. இதனால் ஆன்லைன் பதிவில் ஏற்படும் பல்வேறு குளறு படியால் கடந்த நான்கு நாட்களாக பத்திரப்பதிவு பாதிக்கப்படுகிறது என ஜி.ஆர் நிலம் விற்பனை செய்பவர்களும் நிலம் வாங்குபவர்களும் பத்திரப்பதிவு செய்ய இயலாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பத்திரப்பதிவு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி ஆன்லைனில் துறை ரீதியாக பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதனால் பத்திரப்பதிவு பணிகள் எளிதாகவும் விரைவாகவும் நடந்து வருகிறது. சில நேரங்களில் ஆன்லைன் லிங்க், சர்வர் பிரச்னை என சில குள்றுபடியால் பத்திரப்பதிவு பாதிக்கும் நிலையும் ஏற்படும்.