Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காளையார்கோவிலில் வாரச்சந்தையில் எடை மோசடி: பொதுமக்கள் புகார்

காளையார்கோவில், டிச.30: காளையார்கோவில் நடைபெறும் வாரச்சந்தையில் வியாபாரிகள் சிலர் பயன்படுத்தும் தராசில் எடை அளவு குறைவாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காளையார்கோவில் வாரச்சந்தைக்கு உள்ளுரில் இருந்தும் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள். இங்கு மீன், காய்கறி, பழங்கள் என அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன. சில வியாபாரிகள் விற்பனை செய்யும் பொருட்களின் எடை ஒரு கிலோவுக்கு 200 கிராமுக்கு மேல் குறைவாக எடைபோடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டார்கள். அவற்றில் எடை மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு மோசடியில் ஈடுபட்டோர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த வாரம் மட்டுமே சரியான அளவில் பொருட்கள் விற்கப்படுகின்றன. மறுவாரமே போலி தராசுகளை சில வியாபாரிகள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மோசடியில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.