Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, செப். 30: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பெற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்யலாம். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், இதர வாரியங்களில் உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுவதற்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.