Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராமேஸ்வரத்தில் வீடு புகுந்து 16 பவுன் திருட்டு

ராமேஸ்வரம், ஜூலை 30: பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் தங்க நகை திருட்டு சம்பவத்தால், மீனவ கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலையில் குடும்பத்துடன் கோயில் முளைக்கொட்டு திருவிழாவிற்கு ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் மாரீஸ்வரன் வீட்டின் முன்வாசல் கதவு திறந்து இருப்பதை கண்ட எதிர் வீட்டினர் அவரது மனைவி லெட்சுமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த லெட்சுமி அருகில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

துறைமுக காவல் ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் போலீசார் மாரீஸ்வரன் வீட்டை ஆய்வு செய்தனர். அதில் வீட்டின் முன்வாசல் நிலக்கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் இரண்டு மர பீரோவையும் உடைத்து திருடியது தெரியவந்தது. இதில் வீட்டு பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக மாரீஸ்வரன் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையெடுத்து மாவட்ட தடவியல் துறை போலீசார் வீட்டை சோதனையிட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்தனர்.