Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப் 1 தேர்வுக்கு மகளை அழைத்து சென்ற தந்தை விபத்தில் பலி

ராமநாதபுரம், செப். 29: குரூப் 1 தேர்வுக்காக தனது மகளை டூவீலரில் அழைத்துச் சென்ற தந்தை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி யூனியன் அலுவலகம் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (65). விவசாயி. இவரது மகள் ஜோதி லெட்சுமி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். நேற்று முன் தினம் ராமநாதபுரத்தில் மகள் இத்தேர்வை எழுதுவதற்காக அவரை சக்திவேல் டூவீலரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். கீழக்கரை அருகில் சென்றபோது டூவீலரில் இருந்து நிலை தடுமாறி சக்திவேல், அவரது மகள் ஜோதி லெட்சுமி இருவரும் கீழே விழுந்தனர். இதில், சக்திவேல் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஜோதி லெட்சுமிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சக்திவேலுக்குமுதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.