Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்டபம் ஊராட்சி அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் 5 பேர் மீது வழக்கு: ரூ.1.72 லட்சம் பறிமுதல்

மண்டபம், ஆக.29: மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அரசு பணிகளுக்காக லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணனிடம் இருந்து ரூ.38,500, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியராஜிடம் ரூ.5 ஆயிரம், ஒப்பந்ததாரர்கள் உதயகுமாரிடம் ரூ.90 ஆயிரமும், ரவீந்திரனிடம் ரூ.33.500, நல்லுச்சாமியிடம் ரூ.5 ஆயிரமும் என 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஐந்து பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பணியாற்றும் அலுவலர்களின் ஆண்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டதில் ரூ.33 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது. அவை லஞ்சப் பணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர்.